காளான் வளர்ப்பு

Posted on

காளான்  வளர்ப்பு

காளான் வளர்ப்பது சுலபமானது தான், வைக்கோலை வெட்டி ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை நன்கு சுடுநீரில் போட்டு அவிக்க வேண்டும். பின்னர்  நிழலில் பரப்பி ஒரளவுக்கு நீர் வடியும் வரை விட்டு சரியான பதம் வரும் போது அதைப் பாக்கெட்டில் அடைக்க வேண்டும்.

 

8 அங்குலம் அகலம், 24 அங்குலம் நீளம் கொண்ட பிளாஸ்டிக் பைகளில் முதலில் 5 செ.மீ உயரத்துக்கு, அவித்து நிழலில் ஆறவைக்கப்பட்ட வைகோல் பின்னர் ஓரத்தில் சிறிது காளான் விதை, அதன் மீது மேலும் 5 செ.மீ வைக்கோல் மீண்டும் காளான் விதை என அடுக்காகத் தூவ வேண்டும். ஒரு பைக்கு 150 கிராம் விதை தேவைப்படும். பின்னர் அந்தப் பையைக் கட்டி தொங்கி விட்டு, பக்கவாட்டில் இருதுளைகளை இட வேண்டும்.

பிறகு நாள்தோறும் அறையின் கீழ் உள்ள மணலில் தண்ணீர் விட்டு வர வேண்டும்.  அறையின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல்கள் வழியாகக் காற்று வந்து தண்ணீர் பட்டு அந்த அறையை ஈரப்பதம் நிறைந்ததாக வைத்துக் கொள்ளும். இது போன்ற சூழ்நிலையில் 15 நாட்களில் பிளாஸ்டிக் பாக்கெட் முழுவதும் வளர்ந்து, வெள்ளை நிறமாகக் காட்சி அளிக்கும். 18 நாட்களில் வெளியே மொட்டு வரத் தொடங்கும். 21 நாளில் அதை அறுவடை செய்யலாம்.

 

ஒரு பாக்கெட்டில் 3 முறை அறுவடை செய்ய முடியும்.  ஒரு பாக்கெட்டில் மொத்தம் 800 முதல் 1000 கிராம் வரை காளான் கிடைக்கும்.  50 நாள் சுழற்சி முறையில் பழைய பாக்கெட்டுகளை அகற்றிவிட்டு புதிய பாக்கெட்டுகளை தொங்கவிட வேண்டும். 20 பாக்கெட்டுகளைத் தொங்க விட்டால் 21 நாளில் 17&20  கிலோ காளான் கிடைக்கும்.

தட்ப வெப்ப நிலை :  

நம் தமிழ்நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு சிப்பிக் காளானில் வெள்ளை,  வெளிர் சிவப்பு நிறம் கொண்டவையும், பால் காளான் எனப்படும் வகையும் ஏற்றவை இவை 38 டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் தாங்கக் கூடியவை. ஒரு நாளைக்கு 4&5 மணி நேரம் வேலை செய்தால் போதும். களை பறிப்பது, மருந்து அடிப்பது என எந்த வேலையும் இல்லை.

வருவாய்:

தொடங்கி ஒரு வருடம் முடிவதற்கு முன்பாகவே நாளொன்றுக்கு 10 கிலோ வரை உற்பத்தி செய்ய முடிகிறது.  இதனால் குறைந்த பட்சம் ரூ.1000 வரை ஈட்டலாம். இது தவிர தினமும் 50&60 காளான் விதைப் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்வதால் அதைப் பாக்கெட் ரூ.25  வரை விற்க முடியும்.  காளான் விதையை உற்பத்தி செய்வது சற்றுக் கடினமான பணி. இவற்றை ஆய்வகங்களில் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.

சிறந்த உணவு :

சக்கரை நோய், இதய நோய், ரத்த அழுத்தம், புற்று நோய், பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காளான் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இக்காளான்கள் மூலம் ஊறுகாய், ஜாம், சூப் பவுடர் செய்யப்படுகிறது. சிப்பிக் காளானை ஒரே நாளில் பயன்படுத்த வேண்டும். குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் மூன்று நாள் வரை கெடாமல் இருக்கும். பால் காளான் குளிர்சாதனப் பெட்டி இல்லாமலேயே 4 நாட்கள் வரை தாங்கும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s