அதிக லாபம் தரும் பட்டு வளர்ப்பு!

Posted on

 

அதிக லாபம் தரும் தொழில்களில் பட்டுவளர்ப்பு முன்னணியில் உள்ளது. வேலைப் பளுவை குறைத்து, அதிக வருவாயை ஈட்டித் தரும் வகையிலும் இத் தொழில் காணப்படுகிறது.

இது தொடர்பாக தென்காசியில் உள்ள பட்டு வளர்ச்சித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

விவசாயிகள் சந்திக்கும் மூன்று முக்கிய பிரச்னைகளான ஆள்கள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை, வருவாய் குறைவு ஆகியவற்றைத் தீர்க்கும் வகையில் பட்டுவளர்ப்புத் தொழில் விளங்கி வருகிறது.

பட்டு வளர்ப்புத் தொழிலில் வேறு எந்த விவசாயத்தைக் காட்டிலும் ஆண்டிற்கு, ஒரு ஏக்கருக்கு நிகர லாபமாக குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறலாம். வீட்டிலுள்ள இரண்டு அல்லது மூன்று நபர்கள் போதுமானது. சொட்டுநீர்ப் பாசனம் மூலம் அதிகளவு பரப்பை, குறைந்த நேரத்தில் பாசனம் செய்து ஆண்டு முழுவதும் அதிக வருவாய்ப் பெறலாம்.

விவசாயிகள் உடனடியாக பட்டுவளர்ப்புத் தொழில் மேற்கொள்வதற்கும், தொடரந்து இத் தொழிலைச் செய்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்ட மானிய உதவிகளைச் செய்து வருகிறது.

மல்பரி நாற்று நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு மானியமாக ரூ. 10,500 வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை மானியம் பெறலாம். குறு-சிறு விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப் பாசனத்திற்கு ஒரு ஏக்கருக்கு மானியமாக ரூ.30 ஆயிரமும், பெரு விவசாயிகளுக்கு ரூ.22 ஆயிரத்து 500-ம் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை மானியம் பெறலாம்.

முதல்நிலை புழு வளர்ப்பு மனை கட்டுவதற்கு ரூ.82 ஆயிரத்து 500-ம், 2-ம் நிலைக்கு ரூ.87 ஆயிரத்து 500-ம், 3-ம் நிலைக்கு ரூ.63 ஆயிரமும் மானியமாக வழங்கப்படும். புழு வளர்ப்பு உபகரணங்கள் கொள்முதலுக்கு ரூ.52 ஆயிரத்து 500 மானியமாக வழங்கப்படும். மல்பரி மரங்களைத் தோட்டத்தைச் சுற்றி வளர்ப்பதற்கு 100 மரங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 497 மானியமாக வழங்கப்படும். வெண்பட்டு வளர்ப்புக்கு இலவச பயிற்சி எடுக்க ஒரு விவசாயிக்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு தென்காசியில் உள்ள பட்டு வளர்ச்சித் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanri Thina Malar 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s