நவீன சோலார் தொழில்நுட்பங்கள் தெளிவான விளக்கங்கள் பாகம்

Posted on Updated on

               வருங்கால மனித வாழ்க்கை முழுக்க முழுக்க எரிசக்தியை நம்பியே இருக்கப்போகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை, தற்போது நடைமுறையில் உலக மக்களால் பயன்படுத்தப்படுகின்ற பெட்ரோலியம். நிலக்கரி. இயற்கை எரி வாயு முதலியவை இன்னும் சில காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.  அதன்பின் அவை காலியாகிவிடும்.  என்றைக்குமே காலியாகாத வற்றாத சக்தியை தேட வேண்டிய கட்டாயத்தில் மனித குலம் இன்றைக்கு உள்ளது.  அந்த தேடலில் மிக முக்கியமான ஆற்றலாக சூரிய ஆற்றல் சற்றே பிரபலமடைந்து வருகிறது.  எனவேதான் சூரிய ஆற்றலைப் பற்றிய அடிப்படை தொழில் நுட்பங்களை விளக்கி, அதை எவ்வாறெல்லாம் நம் பொருளாதார சக்திக்கு உட்பட்டு பயன்படுத்த முடியும் என்பதை சற்று ஆழமான தொழில் நுட்ப விளக்கங்களுடன் அனைவருக்கும் புரியும் வகையில் எளிதாக விளக்கவே இந்த முக்கியமான கட்டுரையை எழுதுகிறேன்,  இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னை தொடர்பு கொண்டு விளக்கங்களை பெற்றுக் கொள்ளுமாறு உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எதற்க்காக சூரிய சக்தி ?

      *  முதல் விசயம் இது என்றைக்குமே தீர்ந்து போகாது.

*  நிரந்தர ஆற்றல் மூலமாக நம்பிக்கையுடன் கையாள முடியும்.

*  ஒரு முறை அமைப்பதற்கு மட்டுமே செலவாகுமேயன்றி உற்பத்தி செலவு சிறிதும் இல்லை.

* இலவசமாகவே வெப்பமாகவோ. மின்சாரமாகவோ பயன்படுத்திக் கொள்ள முடியும்.

*  எந்தவித கழிவுகளையும் உருவாக்காத பசுமை ஆற்றல்.  எனவே சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது,

*  இதையெல்லாம் விட முக்கியமான விசயம் சூரிய சக்தி மின்சக்தி தகடுகளின் (Photovoltaic Cells) ஆயுட்காலம் 25 வருடங்களுக்கும் மேல்.

எனவே இதையெல்லாம் கணக்கில் எடுக்கும் போது உலகின் அடுத்த மிக முக்கியமான ஆற்றல் மூலம் சூரியன்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.  சிலருக்கு வரும் முக்கியமான சந்தேகம் பகலில் மட்டுமே சூரிய ஒளி கிடைக்கிறது,  இரவில் என்ன செய்வது?  கவலையே வேண்டாம்,  சூரிய ஆற்றலை வேறு ஆற்றலாக மாற்றி சேமித்து வைக்க முடியும்,  வேண்டும்போது மிக எளிதாக பயன்படுத்திக் கொள்ளவும் முடியும், சூரிய ஆற்றலை சேமிக்க ஹைட்ரஜன் செல் (Hydrogen Cell Technologies) தொழில் நுட்பம் வரும் காலங்களில் பெரும் பங்காற்றப் போகிறது,  இதைப் பற்றி பின்னர் விவரிக்கிறேன். அதே நேரம் பெருமளவில் கிடைக்கும் சூரிய சக்தியை நிலை ஆற்றலாக (Kinetic Energy) சேமித்து பின் பயன்படுத்த முடியும்.  புரியும்படி சொல்வதானால் பகலில் உற்பத்தியாகும் மின்சக்தியை வைத்து பம்புகளை இயக்கி உயரமான இடங்களுக்கு நீரை மேலேற்றி சேமித்து இரவில் அதே நீரை கீழிறக்கி டர்பன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,  எனவேதான் எந்த சூழ்நிலையிலும் சூரிய ஆற்றலை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆணித்தரமாக கூறுகிறேன் .

               சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றலை இரண்டு வழிகளில் வெற்றிகரமாக பயன்படுத்தலாம், ஒன்று மின் ஆற்றலாக மாற்றி இயந்திரங்கள மற்றும் மின் விளக்குகளை இயக்குவது,  இரண்டாவது வெப்ப ஆற்றலாக ஹீட்டர். குக்கர் முதலிய உபகரணங்களில் நீரை சூடாக்கி உணவை வேகவைக்க பயன்படுத்துவது,  இதில் மின் ஆற்றலாக மாற்றுவதே மிகச் சிறந்த வழி,  இதுதான் வரும் காலங்களில் மிகப்பிரபலமடையும் என்பதை உறுதியாக கூறுகிறேன்,  இதற்குத்தான் சூரிய சக்தி தகடுகள் பொரிதும் உதவுகின்றன,
information  from nallathu blogsopt
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s