படிப்பறிவு இல்லை.. கைகொடுத்தது பால்பண்ணை: ரூ.1 கோடி சம்பாதிக்கும் கிராமத்து பெண்

Posted on

வதோதரா: கடந்த 12 ஆண்டுக்கு முன்னர்.. அந்த பெண் சாதாரண கிராமத்துவாசி. இப்போது மிகப்பெரிய கம்பெனியின் தலைமை நிர்வாகி வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறார். நாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ள அந்த கிராமத்து பெண் துளியும் படிப்பறிவு இல்லாதவர். இப்போது 40 பேருக்கு வேலை கொடுத்து சம்பளமும் வழங்கி வருகிறார்.
நாட்டில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட மாநிலம் குஜராத். இங்குள்ள சபர்கந்தா மாவட்டம் பென்தர்புரா கிராமத்தை சேர்ந்தவர் ரமிலாபென்(43). இவரது கணவர் கோவிந்த்பாய். எழுத படிக்க தெரியாது. விவசாய வேலையும் சரிப்பட்டு வரவில்லை. சொந்தமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ரமிலா மனதில் தொடர்ந்து உறுத்தி கொண்டிருந்தது. குஜராத் மாநிலம் பால் உற்பத்தியில் தன்னிகரற்று திகழ்கிறது. நாட்டில் வெண்மை புரட்சிக்கு காரணமாக இருந்த பால் உற்பத்தி இயக்கம், அவருக்கு நம்பிக்கையை கொடுத்தது.

மாடுகள் வளர்த்து நாமும் பால் உற்பத்தி செய்தால் என்ன என்று நினைத்தார். அந்த நினைப்பு வந்தவுடன் செயலில் இறங்கிவிட்டார். கடந்த 2000ம் ஆண்டு கிராம அளவில் இயங்கும் பென்தர்புரா பால் சங்கத்தில் பால் உற்பத்தியாளராக பதிவு செய்து கொண்டார். வங்கி மூலம் கஷ்டப்பட்டு கடன் வாங்கினார். அந்த பணத்தில் 5 கலப்பின பசுக்களை வாங்கி வீட்டில் சிறிதாக கொட்டகை அமைத்து பராமரிக்க தொடங்கினார். பசுக்களிடம் பால் கறந்து சங்கத்துக்கு வழங்கினார். கடின உழைப்பு, நேர்மையால் மாடுகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்தார்.

அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தற்போது, ஜெய் ரான்சோத் தூத் உட்பதன் கேந்திரா என்ற பெயரில் 5 ஏக்கரில் பெரிய பால் பண்ணையின் உரிமையாளர் என்ற அளவுக்கு ரமிலா உயர்ந்துவிட்டார். தனது பண்ணையில் இப்போது 280 பசுக்கள் வைத்திருக்கிறார். பால் கறக்கும் நவீன இயந்திரமும் நிறுவி இருக்கிறார். பண்ணையில் 40 தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து கை நிறைய சம்பளமும் வழங்கி வருகிறார்.

பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைமை அதிகாரிகள் சம்பாதிக்கும் தொகையைவிட மிக அதிகமாக சம்பாதிக்கிறார் ரமிலா. இவரது கடந்த ஆண்டு வருமானம் 1 கோடி 10 லட்சம் ரூபாயை தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு ரமிலாபென் தனது கணவருடன் இஸ்ரேல் சென்றார். அந்நாட்டு உதவியுடன் தனது பால் பண்ணையை கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் இயங்க கூடிய பண்ணையாக மாற்றினார். ‘தற்போது இந்த பண்ணை 24 மணி நேரம் தண்ணீர் வசதி, குளிரூட்டும் வசதி உள்ளிட்ட நவீன பண்ணையாக மாற்றப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் தொழில்நுட்பத்தை கொண்டு ரூ.1 கோடி செலவில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறதுÕ என்று பெருமையுடன் கூறுகி£ர் ரமிலா. இவரது சாதனையை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குஜராத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு வழிகாட்டியாக ரமிலா இருக்கிறார். மாநிலத்தில் உள்ள 16, 117 பண்ணைகளில் ரமிலா மட்டும் 2,124 பண்ணைகள் இயக்கி வருகிறார். 15 மாவட்டங்களிலும் சேர்த்து 31 லட்சம் பேர் பால் பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெண்கள் மட்டும் 8.2 லட்சம்பேர். ‘எங்கள் கூட்டுறவு பால் பண்ணையில் மொத்த ஊழியர்களில் கால்வாசிதான் பெண்கள். ஆனால் அவர்களின் பங்களிப்பு மிக அதிகம்Õ என்கிறார் குஜராத் கூட்டுறவு பால் வர்த்தக சம்மேளன நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s