வறட்சியால் குறுகிய கால சாகுபடிக்கு மாறும் கரூர் விவசாயிகள்

Posted on

பருவமழை பொய்ப்பு, கடும் வறட்சி காரணமாக நெல், கரும்பு, வாழை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறுகிய கால சாகுபடியாக சூரியகாந்தியை பயிரிட்டு சாகுபடி செய்யும் பணியில் இறங்கியுள்ளனர் கரூர் மாவட்ட விவசாயிகள்.

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் அதிக சாகுபடி செய்வது வாழை, கரும்புதான். அதே நேரத்தில் நெல் சாகுபடியும் உண்டு. காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப் பாசனம் மூலமாகவும், சில பகுதிகளில் ஆழ்துளை மூலமாகவும் விவசாயிகள் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் நிகழாண்டில் பருவமழை பொய்ப்பு, வறட்சி காரணமாக நெல், கரும்பு சாகுபடி கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டது. வாழையைப் பயிரிட்டிருந்த விவசாயிகளும் வறட்சியினாலும், சூறைக் காற்றினாலும் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில் குறுகிய காலப் பயிராகவும், அதிகம் தண்ணீர் தேவைப்படாத ஒன்றாகவும் உள்ள சூரியகாந்தியை சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகிவிட்டனர். மாவட்டத்தில் தற்போது புலியூர், உப்பிடமங்கலம், மஞ்சநாயக்கன்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, பஞ்சப்பட்டி, தோகமலை, லாலாபேட்டை, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் பகுதிகளில் விவசாயிகள் சூரியகாந்தி பயிரிட்டுள்ளனர். தற்போது கரூர் மாவட்டத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்ளது. 90 முதல் 100 நாள்களில் சாகுபடி செய்ய இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிக தண்ணீர் தேவை இல்லை: சூரியகாந்தி சாகுபடி செய்ய அதிக தண்ணீரும் தேவைப்படுவதில்லை 5 நாள்களுக்கு ஒருமுறை சூரியகாந்தி பயிருக்கு தண்ணீர்விட்டால் போதும். 10 நாள்கள்வரை தண்ணீர் இல்லாமல் தாங்கிக் கொள்ளக்கூடிய தன்மை கொண்டது சூரியகாந்தி. ஒரு ஏக்கரில் 400 கிலோவரை சூரியகாந்தி உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் விவசாயிகள்.

தற்போது காவிரி மற்றும் அமராவதியில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் தொடர்ந்து கிடைத்து வருவதால் பயிரிட்டுள்ள சூரியகாந்திக்கு பிரச்னை இல்லை. ஒரு ஏக்கர் சூரியகாந்தி சாகுபடி செய்ய ரூ.10,000 வரை செலவாகிறது, அதே நேரத்தில் வெள்ளக்கோவில் சந்தைக்குச் சென்றுதான் விற்பனை செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. எனவே விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் எனவிவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்குப் பயிற்சி: சூரியகாந்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு விற்பனை நுணுக்கங்கள், சூரியகாந்தியை தரம்பிரிப்பது விற்பனை குறித்த பயிற்சியை அளித்து வருகிறோம். பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி சில இடங்களில் முளைக்க ஆரம்பித்துள்ளது. சில இடங்கள் பூ விட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகு சாகுபடி செய்யும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம் என்கிறார் வேளாண் விற்பனை வணிகத் துறை துணை இயக்குநர் ரவி.

விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை: விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று வியாபாரிகள் கொள்முதல் செய்யும் பணி இடைத்தரகர் மூலம் நடைபெறுவதால் விவசாயிகளுக்கு போதிய பலன் இல்லை என்ற கருத்து இருந்து வந்தது. நிகழாண்டில் கரூர் அருகிலுள்ள ராயனூர், குளித்தலை வட்டத்திலுள்ள இரும்பூதிப்பட்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ஒழுங்கமுறை விற்பனைக் கூடங்களில் சூரியகாந்தி விற்பனை செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு விவசாயிகள் தங்களது பொருள்களை நேரடியாக விற்பனை செய்யலாம். இடைத்தரகர் கிடையாது.

விவசாயிகள் தங்களது பொருள்களை லாபத்துடன் விற்பனை செய்து பயன் பெறலாம் என்றார் ராயனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் காந்தி.

Nanri Thina malar

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s