சூரிய ஒளியில் இயங்கும் ஏ.சி. பம்பு செட்டுக்கு 80% மானியம் : அரசு

Posted on

 

சூரிய சக்தியால் இயங்கும் , நகரும் வகையில் அமையும் சூரிய தகடு பயன்படுத்தப்படும் 2,000 ஏ.சி பம்பு செட்டு அமைப்புகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ்  தமிழக முதல்வர் ஆற்றிய உரையில், தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்த பாசன நீர் மற்றும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, மின்சாரத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற இந்தச் சூழ்நிலையில், வேளாண் பாசனத்திற்கு ஒரு சிறந்த மற்றும் நிரந்தரத் தீர்வு காணும் வகையில், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கவும், அதனுடன் நுண்ணீர் பாசன அமைப்புகளை இணைத்தும் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

2013-2014 ஆம் நிதியாண்டில், வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு குழாய் கிணறு, ஆழ் குழாய் கிணறு, திறந்த வெளி கிணறு மற்றும் தரை மட்ட  நீர் தேக்க தொட்டியிலிருந்து நீரை இறைக்க ஏதுவாக, 80 விழுக்காடு மானியத்துடன் கூடிய, 5 குதிரைத் திறன் கொண்ட சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளியினை முழுமையாக தொடர்ந்து பெற ஏதுவாக, நகரும் வகையில் அமையும் சூரிய தகடு பயன்படுத்தப்படும் 2,000 ஏ.சி பம்பு செட்டு அமைப்புகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், தற்போதுள்ள நுண்ணீர் பாசன அமைப்புகளை நடைமுறையில் உள்ள நெறிமுறைகள் மற்றும் பயிர்களுக்கு ஏற்ற முதன்மை தொழில் நுட்பங்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு அமைப்பிற்கான செலவு தோராயமாக 5 லட்சம் ரூபாய் ஆகும். இதில் அரசு மானியம் 80 விழுக்காடு, அதாவது 4 லட்சம் ரூபாய் ஆகும். விவசாயியின் பங்களிப்பு  20 விழுக்காடு, அதாவது ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இதற்கென அரசுக்கு 100 கோடி ரூபாய் செலவு ஏற்படும். விவசாயிகளின் பங்களிப்பான 20 விழுக்காடு தொகையை விவசாயிகள் நிறுவனத்திற்கு செலுத்துவதற்கு ஏதுவாக, தேவைப்படும் விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு கூட்டுறவு வங்கிக் கடன் வசதி பெறவும் ஏற்பாடு செய்து தரப்படும்.

இத்திட்டம், விவசாயிகளுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு உகந்த சூரிய சக்தியினை பயன்படுத்திடவும், நுண்ணீர் பாசனம் மூலம் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்திடவும், வேளாண் பயிர்களில் உயரிய சாகுபடி முறைகள் மற்றும் தோட்டக்கலை பயிர்களில்  பசுமை குடில் மற்றும் நிழல் வலை முறையில் சாகுபடி  போன்ற பல்வேறு நவீன தொழில் நுட்பங்களுடன் உயர் மகசூல் ரகங்களையும் பயன்படுத்தி, அதன் மூலம் உற்பத்தியினை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தினை உயர்த்திடவும் இத்திட்டம் வழிவகை செய்யும் என்று தெரிவித்தார் முதல்வர்.

 

தினமணி  செய்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s