தாவர எண்ணெய் இறக்குமதி 10.55 சதவீதம் உயர்வு

Posted on Updated on

புதுடில்லி:நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, சென்ற பிப்ரவரி மாதத்தில், 10.55 சதவீதம் உயர்ந்து, 9.69 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 8.76 லட்சம் டன்னாக இருந்தது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.

கையிருப்பு:கடந்த மூன்று மாதங்களாக, நம் நாடு அதிகளவில், தாவர எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இதையடுத்து, இதன் கையிருப்பு, துறைமுகம் மற்றும் எண்ணெய் குழாய்களில், 19.6 லட்சம் டன் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, நாட்டின், 40 நாள் சமையல் எண்ணெய் பயன்பாட்டை ஈடு செய்யக்கூடிய அளவாகும்.

சென்ற பிப்ரவரியில், இறக்குமதி செய்யப்பட்ட, 9.69 லட்சம் டன் ஒட்டு மொத்த தாவர எண்ணெயில், சமையல் எண்ணெய் இறக்குமதி, 9.54 லட்சம் டன்னாக உள்ளது. இது தவிர, சமையல் சாராத எண்ணெய் இறக்குமதி, 14,999 டன்னாக உள்ளது என, எஸ்.இ.ஏ., தெரிவித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 8.76 லட்சம் டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இதில், சமையல் மற்றும் சமையல் சாரா எண்ணெயின் பங்களிப்பு முறையே, 8.73 லட்சம் டன் மற்றும் 3,356 டன் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு காலத்தில், ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், பாமாயில் இறக்குமதி, 3.59 லட்சம் டன்னிலிருந்து, 6.69 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

பாமாயில்:இதையடுத்து, ஒட்டு மொத்த எண்ணெய் இறக்குமதியில், இதன் பங்களிப்பு, 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், ஒரு டன் கச்சா பாமாயிலின் விலை, 1,073 டாலரிலிருந்து, 816 டாலராக குறைந்துள்ளது. இதே போன்று, ஒரு டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் விலை, 1,104 டாலரிலிருந்து, 870 டாலராக சரிவடைந்துள்ளது. நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில் (நவ.,-அக்.,), முதல் நான்கு மாதங்களில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 22 சதவீதம் அதிகரித்து, 37.35 லட்சம் டன்னாக உயர்ந்து உள்ளது.சமையல் எண்ணெய் பயன்பாட்டில், நம்நாடு, சீனாவிற்கு அடுத்தபடியாக, இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

தின மலர் செய்தி……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s