அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு ஒரு வெற்றிக்கதை

Posted on Updated on


கோவை மாவட்டத்தின் கதை

என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில் கரூர்வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக அறிவியல் ரீதியாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து பண்ணையை தொடங்குவதற்கு முன்பே பல வகையான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறிவியல் ரீதியாக பராமரித்தால் “ஆடு வளர்ப்பு” ஒரு லாபகரமான தொழில் என்பது நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.

பசுந்தீவன உற்பத்தி:

கோட்டைப்பாளையம் கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்து கோ 4 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளப்பயிர், வேலி மசால், குதிரைமசால் மற்றும் அகத்தி போன்ற பசுந்தீவனங்களைப் பயிரிட்டேன். ஆடுகளுக்கு தேவைப்படும் பசுந்தீவன அளவை கணக்குப்போட்டு, சிறிய சிறிய பாத்திகளை அமைத்து பசுந்தீவனங்களை முறையாகப் பயிரிட்டு வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் பசுந்தீவனப் பற்றாக்குறை ஏற்படுவது இல்லை.

விற்பனை வழிமுறைகள்:

நான் வியாபாரிகளுக்கு ஆடுகளை அறுப்பதற்கு விற்பனை செய்வதற்கு முன்பே எனது ஆடுகளை எடைபோட்டு, அதிலிருந்து வெட்டிய உடல் எடை எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப்போட்டு என்னுடைய ஆட்டின் மதிப்பை தெரிந்துகொண்டு விலை நிர்ணயம் செய்துகொள்வேன். பிறகு வியாபாரியிடம் விற்பனை செய்யும்போது நான் நிர்ணயித்த விலைக்குக் குறைவாக ஆடுகளைக் கொடுக்க மாட்டேன். இவ்வாறு ஆடுகளை விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கிறது. மேலும் உயிருடன் ஆடுகளை விற்பதைவிட அவற்றை இறைச்சியாக மதிப்பூட்டி விற்பனை செய்யும்போது மேலும் அதிக லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்து ஆடுகளை அறுக்க ஒரு இடத்தை ஏற்படுத்தி, போதிய வசதிகளைச் செய்து, தேவைப்படும்போது, ஆடுகளை அறுத்து இறைச்சியாகவும் விற்பனை செய்கிறேன்.

மேலும் ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க ஆர்வமுள்ள பண்ணையாளர்கள் கீழ்க்காணும் சில முக்கிய விபரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

 • ஆட்டுப்பண்ணை தொடங்கும் பண்ணையாளரே அந்தப் பண்ணையின் முதல் வேலையாளாக இருக்க வேண்டும்.
 • ஆட்டுப்பண்ணை தொடங்க முதலில் முறையான பயிற்சி அவசியம்.
 • பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி அதிக அளவு பயறுவகை மற்றும் மரவகைப் பசுந்தீவனங்களைப் பயிரிட வேண்டும்.
 • உயர்ந்த இனக்கிடாய்களையும், பண்ணை முறையில் வளர்க்கப்பட்ட ஆடுகளையும் தேர்வு செய்து, வாங்கி, பண்ணையை தொடங்க வேண்டும்.
 • நோய் தடுப்பு, குடற்புழு மற்றும் ஒட்டுண்ணிகள் நீக்கம் போன்ற பண்ணை நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
 • குட்டிகளில் இறப்பைத் தடுக்க, குட்டிகள் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
 • நாம் வளர்த்த ஆட்டின் மதிப்பைத் தெரிந்துகொண்டு இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஏமாறாமல் உடல் எடைக்கு ஏற்ப ஆடுகளை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.

மேற்காணும் வழிமுறைகளை கடைபிடித்து அறிவியல் ரீதியாக ஆடுகளை வளர்த்தால் வெற்றி நிச்சயம். தொடர்புக்கு:

தகவலுக்கு – ஐ.நாசர், கோயம்புத்தூர். 99943 82106.
தினமலர் தகவல் – கே.சத்தியபிரபா, உடுமலை.

நன்றி வேளான் அரங்கம் ……

Advertisements

8 thoughts on “அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு ஒரு வெற்றிக்கதை

  mahendran said:
  June 27, 2014 at 9:55 am

  மிகவும் அருமை, நான் management துறையில் பட்டயப்படிப்பை முடித்து ஒரு வருடம் தனியாரில் வேலை செய்தேன், இப்போது ஆட்டுப்பண்ணை அமைக்கும் முயர்ச்சியில் உள்ளேன். என்னிடம் 2 ஏக்கர் நிலம் உள்ளது, முதலில் இருபது ஆடுகள் வளர்க்கலாம் என்று முடிவுசெய்து உள்ளேன், இதற்க்கு தேவையான் கொட்டகை எங்கு வாங்குவது என்று சொல்லுங்கள்

   pasumaiboomi responded:
   September 11, 2014 at 8:12 am

   You can gate your aria local vendor @ same time you can use olde material is the best

  venkatesan said:
  May 5, 2013 at 7:48 am

  best of luck

  Pandian said:
  March 14, 2013 at 12:31 pm

  When you want to republish any articles, pls publish the name from which you got the source. Otherwise pls use the ‘reblog’ option. Removing all links of the source and publishing as if you prepared the content is not ethical. What’s wrong in doing reblog or mentioning the source?

   pasumaiboomi responded:
   March 18, 2013 at 11:28 am

   yes Mr pandiyan your right .. thank you for your valuable comment ..

  jan said:
  March 14, 2013 at 8:51 am

  அழிந்து வரும் விவசாய நிலங்களுக்கு காப்பாற்ற இது போன்று ஒரு வலை தளம் மிகவும் தேவையான ஒன்று வாழ்த்துக்கள்

  pasumaiboomi responded:
  March 14, 2013 at 8:46 am

  உங்கள் நல்ல முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள் நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s