பூக்கள்

ஜூன், ஜூலை மாதங்களில்

மலர்கள் நடவு செய்தால் கூடுதல் மகசூல்!

 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஜூன், ஜூலை மாதங்களில் மலர்கள் நடவு செய்தால் கூடுதல் மகசூலும், அதிக வருவாயும் பெறலாம்.

சாமந்தி: கோ1, கோ2 எம்டியு 1 ரகங்களை பயிரிடலாம். நடவுக்கு ஏற்ற பருவம் ஜூன், ஜூலை மாதம். ஹெக்டேருக்கு தொழு உரம் 25 டன், தழை, மணி, சாம்பல் சத்து முறையே 62.5, 120, 25 கிலோ என்ற அளவில் அடியுரமாகவும், 30 நாள்களுக்குப் பிறகு தழைச்சத்து 62.5 கிலோ மேல் உரமாகவும் இட வேண்டும்.

கணிசமான மகசூல் பெற ஜிப்ரலிக் அமிலத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி கிராம் என்ற அளவில் கரைத்து நடவு செய்த 30, 45 மற்றும் 60 நாள்களில் தெளிக்க வேண்டும். இலைப்பேன், அசுவிணி, இலைப்புழுக்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த டிரையசோபாஸ் 2 மில்லி, தயாமெதாக்ஸம் ஒரு மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்துத் தெளிக்கலாம்.

வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு 2.5 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் மாங்கோசெப் 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, சபரிமலை சீசன்களுக்கு பூ அறுவடை வரும் வகையில் திட்டமிட்டு சாமந்தி சாகுபடி செய்தல் அதிக வருவாய் பெறலாம்.

பூக்களை மூட்டை அல்லது கூடை அளவுகளில் விற்பனை செய்யாமல் எடை அளவில் விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

செண்டுமல்லி: மதுரை 1, உள்ளூர் மஞ்சள், ஆரஞ்சு வகை ஈஸ்ட், வெஸ்ட் (வீரிய ரகம்) ஆகிய ரகங்களை பயிரிடலாம். நடவுக்கு ஏற்ற பருவம் ஜூன், ஜூலை மாதம். ஹெக்டேருக்கு 1.5 கிலோ விதைகள் போதுமானது. தொழுஉரம் 75 டன், தழை, மணி, சாம்பல் சத்து முறையே 45, 90, 75 கிலோ என்ற அளவில் அடியுரமாகவும், 45 நாள்களுக்குப் பிறகு தழைச்சத்து 45 கிலோ மேல் உரமாகவும் இட வேண்டும்.

சிவப்பு சிலந்தியைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் கெல்தேன் ஒரு மில்லி கலந்து தெளிக்க வேண்டும். பண்டிகை காலங்களில் பூ அறுவடை செய்யும் வகையில் திட்டமிட்டு சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்.

நிலசம்பங்கி: மெக்ஸிகோ, பூனா, கொல்கத்தா, பெங்களூர், சிங்கார், ஹானி, பிரஜ்வாஸ் ரகங்களை பயிரிடலாம். ஜூன், ஜூலை மாதம் நடவுக்கு ஏற்ற பருவம். கிழங்குகள் அறுவடை செய்த பிறகு 30 நாள்கள் கழித்து நடவு செய்ய வேண்டும். கிழங்குகளை நடுவதற்கு முன்பாக வளர்ச்சி ஊக்கிகளில் நனைத்து நடவு செய்தால் நல்ல விளைச்சலைப் பெறமுடியும்.

ஹெக்டேருக்கு தொழு உரம் 25 டன், தழை, மணி, சாம்பல் சத்து முறையே 25, 60, 60 கிலோ என்ற அளவில் அடியுரமாக இட வேண்டும். பின்னர், 3ஆவது, 6ஆவது, 9ஆவது மாதங்களில் தழைச்சத்து 25 கிலோ மேல் உரமாக இட வேண்டும். ஜிப்ரலிக் ஆசிட் 3 மருந்தை லிட்டருக்கு 2 கிராம் அளவில் தண்ணீரில் கலந்து தெளிப்பதால் பூங்கொத்துகளின் நீளத்தையும், மலர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தலாம்.

நூற்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3ஜி குருணை மருந்தை ஒரு செடிக்கு ஒரு கிராம் அளவில் வேர்ப்பகுதியைச் சுற்றி இட்டு உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும்.

குண்டுமல்லி: ஹெக்டேருக்கு வேர்விட்ட குச்சிகள் மற்றும் பதியன்கள் 6,400 எண்ணிக்கையில் தேவைப்படும். செடி ஒன்றுக்கு 60 கிராம் தழைச்சத்து 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய ரசாயன உரங்களை இரு பகுதிகளாகப் பிரித்து கவாத்து செய்வதுடன் ஒருமுறையும், ஜூன், ஜூலை மாதத்தில் மறுமுறையும் செடியைச் சுற்றி இட்டு மண்ணோடு கலக்கச் செய்ய வேண்டும்.

தரையிலிருந்து 50 செ.மீ. உயரத்தில் நவம்பர் இறுதி வாரத்தில் மல்லிகைச் செடிகளை கவாத்து செய்யும்போது நோயுற்ற, உலர்ந்த குச்சிகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டிவிட்டு சூரிய ஒளி நன்குபடும் வகையில் வசதி ஏற்படுத்த வேண்டும்.

மொட்டுப் புழுக்கள், இளம் மொட்டுக்களை தாக்கி பெருத்த சேதம் உண்டுபண்ணும். தையோடிகார்ப் 1.5 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

சிலந்தி பூச்சியைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இரும்புச் சத்து குறைபாடு, வேர் அழுகல், வேர்ப் புழுத் தாக்குதலால் இலைகள் மஞ்சளாகும். இதைத் தடுக்க லிட்டருக்கு 5 கிராம் பெர்ரஸ்சல்பேட் கரைசலை 3 மாதத்துக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். வேர் அழுகலுக்கு காப்பர் ஆக்ஸி குளோரைட் 2.5 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசல் தயாரிக்க வேண்டும்.

இந்தக் கரைசலை செடியிச் சுற்றி மண்ணில் ஊற்ற வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களில் குண்டு மல்லியை பயிர் செய்வதன் மூலம் நோய் வராமல் கட்டுப்படுத்தலாம். ஹெக்டேருக்கு 8,750 கிலோ வீதம் ஆண்டுக்கு மகசூல் கிடைக்கும்.

தின மலர் செய்தி………

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s