மதிப்பு கூட்டு விவசாய

ழதர்மபுரி:சமீப காலமாக, வேளாண் விளை பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்டு, மக்களை கவரும் வகையில் “பேக்கிங்’ செய்யப்பட்டு விற்பனைக்கு வருவது அதிகரித்து வருகிறது.
சந்தையில் இது போன்ற பொருட்களுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால், மதிப்பு கூட்டு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தீவிரமாக களம் இறங்கிஉள்ளனர்.
வாடிக்கையாளர் சந்தை போட்டி நிறைந்த தற்போதைய சூழ்நிலையில், பெரிய முன்னணி நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் “பேக்கிங்’ முறைகளில் மாற்றம் செய்வதில், அதிக அக்கறை காட்டி வருகின்றன.சந்தைக்கு வரும் பொருட்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருந்தால் மட்டுமே, விற்பனை இலக்கை எட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டுஉள்ளது. இதனால், பெரிய முன்னணி நிறுவனங்கள் ஆண்டுக்கு, ஐந்து முதல், எட்டு முறை வரை, சந்தையில் தாங்கள் அறிமுகம் செய்யும் பொருட்களின் “பேக்கிங்’ உள்ளிட்டவைகளை மாற்றி, விளம்பரம் செய்து, சந்தைப்படுத்தி வருகின்றன.
பழங்கள்:கடந்த காலங்களில், விவசாய உற்பத்தி பொருட்கள், பழங்கள் உள்ளிட்டவை, மொத்தமாக சந்தையில் விற்பனைக்கு வந்தன. இவை, தரம் பிரிக்கப்படாமல், அறுவடை செய்யப்பட்ட நிலையிலேயே விற்பனைக்கு வந்ததாலும், கல், மண், தூசி படிந்திருந்ததாலும், அவற்றை வாடிக்கையாளர்கள் ஒதுக்கும் நிலை இருந்தது.இதே போல் பழங்களையும் தரம் பிரித்து விற்பனை செய்வதில், கடந்த காலங்களில் வியாபாரிகள் அக்கறை காட்டவில்லை. தரமான பொருட்கள் கிடைக்கும் போது, கூடுதல் விலை கொடுத்து வாங்க வாடிக்கையாளர்கள் தயார் நிலையில் இருப்பதை உணர்ந்து, சமீப காலமாக உணவு உற்பத்தி பொருட்கள், பழங்கள், ஊறுகாய் உள்ளிட்டவைகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளன.
மதிப்பு கூட்டு பொருட்களில், ஆரம்பத்தில், பேரீச்சை மற்றும் உலர்ந்த பழங்கள் நன்கு “பேக்’ செய்யப்பட்டு, சந்தைப்படுத்தப்பட்ட போது, அவற்றுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதனால், இன்று ஊறுகாய் முதல் சட்னி வரையில், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.வாடிக்கையாளர்களுக்கு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், இம்முறையில் பொருட்களை சந்தைப்படுத்துவதில், சிறு நிறுவனங்களும் போட்டி, போட துவங்கியுள்ளன.சென்னை, அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி:இதே போல் தனியார் ஏற்றுமதி நிறுவனங்களும் மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்க பயிற்சி அளித்து வருகின்றன.சிறு விவசாயிகள் சந்தைப்படுத்தும் பணியின் போது, மதிப்பு கூட்டு பொருட்களாக சந்தைப்படுத்தினால், விற்பனை இலக்கு, லாபம் உள்ளிட்டவைகளை எளிதாக பெற முடியும். தற்போது, பேரீச்சை, அத்திப்பழம், நாவல் பழம், கிளாச்சிக்காய் உள்ளிட்டவைகள் கூட, மதிப்பு கூட்டப்பட்டு, அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரத் துவங்கி இருப்பது மதிப்பு கூட்டு பொருட்களுக்கு சந்தையில் கிடைத்து வரும் வரவேற்பை, எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
நடப்பு நிதியாண்டில் இதுவரையிலுமாக…வங்கிகள் கடன் வழங்குவதில் மந்த நிலை
மும்பை:நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக, வங்கிகள் திரட்டிய டெபாசிட் சிறப்பாக அதிகரித்துள்ள போதிலும், வழங்கப்பட்ட கடன்கள் மந்த நிலையிலேயே உள்ளன.
இதை எடுத்துக்காட்டும் விதமாக, செப்., 7ம் தேதி வரையிலான காலத்தில், வங்கிகளின், கடன் மற்றும் டெபாசிட் விகிதம் 33 சதவீதம் என்றளவில் சரிவடைந்து உள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 43 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துக் காணப்பட்டது.நடப்பு நிதியாண்டில் இதுவரையிலுமாக, வங்கிகள் திரட்டிய டெபாசிட் 4.17 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் சிறப்பாக அதிகரித்துள்ளது.
இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 3.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.அதேசமயம், வங்கிகள் வழங்கிய கடன் 1.35 லட்சம் கோடியிலிருந்து, 1.38 லட்சம் கோடி ரூபாயாக சற்றே அதிகரித்துஉள்ளது. இது, வங்கி கடன் வளர்ச்சியின் மந்த நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது.எனினும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வங்கிகள் வழங்கிய கடன் 1.49 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது, இரண்டாவது காலாண்டில் இதுவரையிலுமாக, 11,153 கோடி ரூபாய் குறைந்து, 1,38,064 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.பொருளாதார சுணக்க நிலையால், நிறுவனங்கள், விரிவாக்க திட்டங்களை ஒத்திப் போட்டுள்ளன.
இதன் காரணமாக, நிறுவனங்கள், வங்கிகளிடம் கடன் வேண்டி விண்ணப்பிப்பது குறைந்துள்ளது.மேலும், கடன் பெற விரும்பும் பெரிய நிறுவனங்கள், வர்த்தக ஆவணங்கள் வாயிலாக, தனியார் நிதி நிறுவனங்களிடம், குறைந்த வட்டியில் கடன் திரட்டிக் கொள்கின்றன. ஆனால், வங்கிகள், அவற்றின் அடிப்படை வட்டி விகிதத்தை காட்டிலும், குறைவான வட்டியில் கடன் வழங்க இயலாது என, பொதுத் துறையைச் @Œர்ந்த முன்னணி வங்கியின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s