மீன் வளர்ப்பு

IMG_5704

நன்னீர் மீன் வளர்ப்பு

நண்ணீர் மீன்வளம்நம் நாட்டில் நண்ணீர் மீன்வளர்ப்பு சுமார் 13.67 கோடி ஹெக்டர் பரப்பளவில் வளர்க்கின்றனர். இதில் 2.25 கோடி ஹெக்டரில் குளங்கள் மற்றும் தொட்டிகள், 8.27 கோடி ஹெக்டர் நீர்நிலைகள் மற்றும் 3.15 கோடி ஹெக்டர் நீர்த்தேக்கங்கள் உள்ளன. 1990ல் குறிப்பிட முடியாத அளவிற்கு மீன் உற்பத்தி அதிகமாக இருந்தது.


நண்ணீர்
மீன் வளத்தில் உர மேலாண்மைஇந்தியாவில் அதிகப்படியாக நண்ணீர் மீன்வளம் உயர்ந்து வருகிறது. மேலும் உற்பத்தியை அதிகரிக்க வேவ்வேறான மீன் வளங்களை திறமையாகக் கையாள வேண்டும். இதில் முக்கியமான ஒன்று குளத்தைப் பராமரித்து, தேவையான அளவு உரமிடுதலாகும். குளத்தின் பராமரிப்புகள், மண் மற்றும் நீரின் தரத்தை பொருத்ததே.


குளத்தி
ற்கு உரமிடுதல்மீன் குளத்தில் உணவு சுழர்ச்சியில் முதல் தேவையானவை தாவர நுண்ணுயிர் மிதவைகள். இந்த நுண்ணுயிர்கள் நீரைப் பச்சை நிறமாக மாற்றுகிறது. இதனால் நுண்ணுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கிறது. எனவே இருப்புச்செய்யும் மீன்களுக்கு இதுவே இயற்கை உரமாக அமைகிறது. மாவுப்பொருள் தொகுப்புகளில் கரியமில வாயு, தண்ணீர் மற்றும் சூரிய ஒளி இருந்தாலும் மிதவை தாவர நுண்ணுயிர்களுக்கு கனிமச்சத்துக்கள் தேவைப்படுகிறது (தழைச் சத்து, மனிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்பு, கந்தகம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மற்றும் மாங்கனீசு சத்துக்கள்) மிதவை தாவர நுண்ணுயிர்கள் வளர்வதற்க்கும் மற்றும் குளத்தின் உற்பத்தி திறனிற்கும் தேவையான சத்துக்கள் நீரில் இருக்க வேண்டும். மண் மற்றும் நீரின் மேலாண்மையை பொருத்தே குளத்தில் உள்ள இருப்பு மீன்களுக்கு, இயற்கை உணவு கிடைக்கும். இதனால் மீன்கள் நல்ல வளர்ச்சியடையும். குளத்தில் உள்ள நீருக்கு தேவையான சத்துக்கள் குளத்து மண்ணிலிருந்து கிடைக்கிறது.


குளத்து
மண்ணின் தன்மைகள்

மண்ணின்
கார அமிலத்தன்மைகுளத்தில் மீன் உற்பத்திக்கு கார அமிலத்தன்மை முக்கியமான ஒன்று. இது குளத்தில் உள்ள இரசாயன வினைகளை கட்டுப்படுத்துகிறது. நடுநிலையிலிருந்து சிறிது காரத் தன்மையுள்ள மண் காரஅமிலத்தன்மை (7 மற்றும் அதற்கு மேல்) உள்ளவை மீன் உற்பத்திக்கு ஏற்றதாகும். இந்த அளவைவிட குறைந்தால் அமிலத்தன்மையாக மாறி நீரில் உள்ளச் சத்துக்களை குறைத்துவிடும்.


கரிம
உள்பொருள்பாக்டீரியாவின் ஆற்றலை அதிகரிக்க மற்றும் உயிர் வேதியல் முறை மூலம் நுண்ணுயிர்களில் இருந்து சத்துக்கள் வெளியாகிறது. இயற்கை கரிமம் குளத்து மண்ணில் 0.5%க்கு குறைவாக இருக்கக் கூடாது. 0.5-1.5% மற்றும் 1.5 – 2.5%. நடுநிலை மற்றும் அதிக அளவு இருக்கலாம். இதே போன்று 2.5%க்கு மேல் இருந்தால் மீன் உற்பத்தி செய்ய முடியாது.


கரிமம்: நைட்ரஜன்
விகிதம்மண் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு கரிமம்:நைட்ரஜன் விகிதம் தேவைப்படுகிறது. கரிமம்:நைட்ரஜன் விகிதம் உடையும் அளவு அதி வேகமாக, நடுநிலை, குறைவாக முறையே >10,10-20, 20 என்றவாறு இருக்க வேண்டும். பொதுவாக கரிமம்:நைட்ரஜன் விகிதம் 10 முதல் 15க்குள் இருந்தால் மீன் வளர்ப்புக்கு ஏற்றதாகும். 20:1 இருந்தால் மீன் அதிகளவு உற்பத்தியாகும்.


பொதுவான
ஊட்டச்சத்துக்களின் நிலைகள்முக்கியமான ஊட்டச்சத்துக்கள் தழை, மனி, மற்றும் சாம்பல் சத்துக்களாகும். மீன் குளங்களில் பாஸ்பேட் உரத்திற்கு சூப்பர் பாஸ்பேட்டை பயன்படுத்தலாம். குளத்து மண்ணில் உள்ள பாஸ்பேட் அளவைப் பொருத்து 156 – 312 கி சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் அளிக்க வேண்டும். மீன் வளர்ச்சி மற்றும் இருப்பு குளங்களில் செய்யும் போது 250 – 468 கி சூப்பர் பாஸ்பேட் இருக்க வேண்டும். இன்னும் நல்ல உற்பத்தி கிடைக்க வேண்டுமென்றால் வார இடைவெளி விட்டு பாஸ்பேட் உரம் அளிக்க வேண்டும்.மியுரேட் ஆஃப் பொட்டாஸ் மற்றும் பொட்டாசியம் சல்பேட் இவை இரண்டும் பொட்டாஸ் உரங்களாக மீன் குளத்தில் பயன்படுத்துகிறார்கள். மியுரேட் ஆஃப் பொட்டாஸ் 16 – 32 கி/ஹெ. அல்லது பொட்டாசியம் சல்பேட் 20 – 40 கி/ஹெ. வளர்ச்சி மற்றும் இருப்புச் செய்யும் போது அளிக்க வேண்டும். இதை ஒரு மாதத்திற்கு இரண்டு முறையில் சரிபாதியாக பிரித்து அளிக்க வேண்டும்.

குளத்தில் நீர் நல்ல கரும்பச்சை நிறத்தில் இருக்கும்போதே குளங்களில் அதிக பாசிகள் தோன்றி நீரின் மீது அடை அடையாக மிதக்கும். இதன் மூலம் உயிர்வளிக் குறைவை தடுக்கலாம், குறைந்த உரங்களே தேவைப்படும்.
இயற்கை மற்றும் இரசாயன உரங்களை கலந்து இடும் போது கவனம் தேவை. சுத்தமில்லாத குளத்தில் இயற்கை உரமிட்டால் சுத்தமாகும். அதிக இயற்கை உரமிடுவதால் பாசிகள் நிறைய வளரும்.

மீன் அறுவடை தொழில்நுட்பங்கள்

மீன் அறவடை தொழில்நுட்பம் மூலம் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் உயர்கிறது. இதன் மூலம் மீன்பிடிக்க நிறைய வழிமுறைகள் உள்ளது. மீன் வள வகைகள் மற்றும் மீன்பிடிக்கும் சாதனங்களை பொருத்தே மீன் அறுவடை முறைகள் அமையும். பிடிப்பு மீன் வளத்தில் சிறு மீன்வகை முதல் சூறை மீன் வரை பிடிக்கலாம்.
பிடிப்பு மீன் வளத்தில் அனைத்து மீன்களையும் பிடிப்பார்கள். இதற்கு தகுந்த மீன் பிடிப்பு வலைகள் மற்றும் முறையான அறுவடை நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும். மீன் அறுவடை தொழில்நுட்பத்தில் மூன்று வகை உண்டு.

  • வலை மூலமாக பிடிகப்படும் தனி மீன் (அல்லது) கூட்டமான மீன்கள்
  • பொறி வைத்து பிடிக்கப்படும் மீன்கள் (மீன் பொறி)
  • தூண்டில் இரை, பொறி அல்லது ஒலி வைத்து ஈர்க்கப்படும் மீன்கள்

மீனவர்கள் பல வகையான மீன் பிடிப்பு கலன்களை வைத்து மீன்களை பிடிப்பதனால் இந்த உலகில் உள்ள மக்களுக்கு கடல் உணவு கிடைக்கிறது. தற்போது பழைய வகையான மீன்பிடிப்பு வலைகளை வைத்து மீன் பிடிக்கின்றனர். இன்னும் புதிய தொழில்நுட்பத்தினால் மீன் பிடிக்கம் சாதனங்கள் இருந்தால் மீன் வளம் அதிகரிக்கும். முக்கியமான மீன் அறவடை முறைகள் விசை மீன்பிடிப்பு, சூழ்வலை, தூண்டில், செவுள் வலை மற்றும் பொறி ஆகும்.

மீன் அறுவடை தொழில்நுட்பத்திலுள்ள புதிய முன்னேற்றங்கள்

  • மீன் பிடிப்பு தொழில்நுட்பம் மற்றும் மீன் பிடிப்பு இயந்திரத்தில் முன்னேற்றம்
  • புதிய செயற்கை மீன் பிடிப்பு வலைகள்
  • செயற்கைகோள் மூலம் தொலை உணர்வுத மீன்பிடிப்பு தகவல்கள்
  • மின்சாரம் மூலம் கப்பலோட்டத்தில் முன்னேற்றம்
  • மீன்வளம், மீன் இனப்பெருக்கம் மற்றும் கடல் சுற்றுப்புற தூய்மை பற்றிய விழிப்புணர்வு.

மீன் அறுவடை முறைகள்

மீன் பிடிப்பு உறுப்புகள், கலன்கள் மற்றும் மீன் பிடிப்பு வலைகள் இவை அனைத்தும் மீன் அறுவடை முறைகளாகும். மீன்பிடிப்பு கலன்கள் என்றால் மிதக்கும் பொருட்களை வைத்து மீன்களை பிடித்து, எடுத்துச்சென்று, பதப்படுத்தி மற்றும் பாதுகாத்து வைத்தல். மீன்பிடிப்பு கலனில் மிகவும் அடிப்படையாக உள்ளது மீன்பிடிப்பு வலைகள். பெரும்பாலும் மீன்களை பிடிக்க வலைகளை தான் பயன்படுத்துகிறார்கள்.

தொண்று தொட்ட முறைகள்

வளையச் சுருக்கு வலை, கட்டு வலை, சீன கூள் வலை, வீச்சு வலை, மா பாச்சு வலை, சிறு வலை, செவுள் வலை, தூண்டில் கொக்கி, மற்றும் பானைப் பொறி, இவை அனைத்தும் தொன்றுதொட்ட மீன் அறுவடை முறைகளாகும்.


நவீன
முறைகள்பொறி, சுருக்கு வலை, செவுள் வலை, இயந்திர தூண்டில், போலி இரை, மற்றும் ஓடு கயிறு இவைகள் அனைத்தும் நவீன முறையான மீன் அறுவடை முறைகள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s